
குஜராத் மாநிலத்தில் நடக்க உள்ள ராஜ்யசபா தேர்தலையொட்டி அம்மாநில காங். எம்.பி.க்கள் இருவர் இன்று ராஜினாமா செய்தனர்.
குஜராத் மாநிலத்தில் காலியாக உள்ள நான்கு ராஜ்யசபா பதவிக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஓட்டு முக்கியம்.
இந்நிலையில் முதல்வர் விஜய் ரூபானியை காங். கட்சியைச் சேர்ந்த கீர்த்தி படேல், லலித் வசோயா என்ற இரு எம்.எல்.ஏ..,க்கள் சந்தித்து பேசினர்.
இதையடுத்து தங்களது பதவியை ராஜினாமா செய்து சபாநாயகர் ராஜேந்திரா திரிவேதியிடம் கொடுத்தனர். அவர்களது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொத்தமுள்ள 182 சட்டசபை உறுப்பினர்களில், பா.ஜ.விற்கு 103 உறுப்பினர்களும், காங். கட்சிக்கு 68 உறுப்பினர்களும் உள்ளனர். ராஜ்யசபா தேர்தலில் எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு முக்கியம் என்பதால் காங். பலத்தை குறைக்க எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா படலம் அரசியல் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

AthibAn Tv