Type Here to Get Search Results !

காங்கிரசின் சில தலைவர்கள், 'தி.மு.க., தரப்பில் நமக்கு குறைவான இடங்கள் ஒதுக்க வாய்ப்புள்ளது; அதிக இடங்களை போராடி பெற வேண்டும்'

பாஜகவின் அதிர வைத்த திட்டத்தால் ...

தமிழகத்தில் சட்டசபை பொதுத் தேர்தல், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் இதற்கான ஆயத்த வேலைகளில் இறங்கிவிட்டன. தமிழக காங்கிரசின் சில தலைவர்கள், 'தி.மு.க., தரப்பில் நமக்கு குறைவான தொகுதிகளை ஒதுக்க வாய்ப்புள்ளது; அதிக இடங்களை போராடி பெற வேண்டும்' என்பதில் பிடிவாதமாக உள்ளனர்.

தமிழக காங்கிரஸ் - எம்.பி., ஒருவர், இதற்கான வேலைகளில் அதிரடியாக ஈடுபட்டுள்ளார். 'தமிழக சட்டசபை தேர்தலில் அதிக, 'சீட்'கள் கேட்க வேண்டும்' என, டில்லி மேலிடத்திற்கு கடிதம், 'இ - மெயில்' என, காங்கிரசார் கோரிக்கைகளை குவித்து வருகின்றனர். இந்த இளம் எம்.பி., தான், இதற்கு பின்னணியில் உள்ளாராம். அத்துடன், 15 நிமிடம் ஓடக் கூடிய, 'வீடியோ'வும், கட்சி மேலிடத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளதாம். அதில் கட்சியினரின் கருத்து மற்றும் காங்கிரஸ் செல்வாக்கு பெற்றுள்ள தொகுதி மக்களின் கருத்துகளும் தொகுக்கப்பட்டுள்ளதாம்.

இது, சோனியாவிற்கு நெருக்கமான சில தலைவர்களுக்கு பிடிக்கவில்லை. தேர்தல் சமயத்தில் வழக்கம் போல நடக்கும் விஷயம் தான் இது. கடைசியில், தி.மு.க., சொல்வதைக் கேட்டு, அவர்கள் கொடுக்கும் தொகுதிகளை வாங்கிக் கொண்டு, கட்சி மேலிடம் அமைதியாகி விடும் என, இந்த தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.