எல்லை பிரச்னை தொடர்பாக இந்திய - சீன ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை

Dina AthibAn
0


எல்லை பிரச்னை தொடர்பாக இந்திய - சீன ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய சீன வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், சீன வீரர்கள் தாக்கியதில், 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்களின் பதில் தாக்குதலில் 35க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால், எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை குறைக்கும் வகையில் இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதில் ஏற்பட்ட முடிவுகளின் படி, கல்வான் பகுதியில் இருந்து இரு நாட்டு வீரர்களும் விலக்கி கொள்ளப்பட்டனர்.

இந்நிலையில் இந்தியா - சீனா இடையிலான ராணுவ கமாண்டர்களின் 3ம் கட்ட பேச்சுவார்த்தை சுசூல் பகுதியில் துவங்கியது. லடாக்கின் கிழக்கு பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் நிலவிவரும் பதற்றத்தை குறைக்க இந்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!