இந்திய எல்லைக்குள் 423 மீட்டர் தூரம் வரை சீனா ஆக்கிரமித்துள்ள

Dina AthibAn
0


கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய எல்லைக்குள் 423 மீட்டர் தூரம் வரை சீனா ஆக்கிரமித்துள்ள செயற்கைக்கோள் படம் வெளியிடப்பட்டது.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவினர். இதனையடுத்து நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்களின் பதில் தாக்குதலில் 35க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே இந்திய பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடி வந்தது.

இதற்கிடையே கடந்த 25ம் தேதி நிலவரப்படி, 1960ம் ஆண்டு முதல் சீனா உரிமைகோரி வரும் எல்லைக் கோட்டுப் பகுதியில் இருந்து 423 மீட்டர் தூரம் வரையுள்ள இந்திய எல்லைக்குள் சீன படைகள் ஊடுருவியுள்ளன.
இது தொடர்பாக என்.டி.டி.வி வெளியிட்டு உள்ள உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் படங்களில், இந்திய நிலப்பரப்பின் 423 மீட்டர் தூரத்தில் சீனாவின் 16 கூடாரங்கள், ஒரு பெரிய தங்குமிடம் அமைக்கப்பட்டிருப்பதையும் மற்றும் 14 வாகனங்களையும் காண முடிகிறது. இந்த செயற்கைக்கோள் படங்கள் மூலம் சீன படைகளின் ஊடுருவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!