
வரும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினத்தையொட்டி இந்தாண்டு பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட யோக நிகழ்ச்சி முடிவு செய்யப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக மத்திய ஆயுஷ் அமைச்சகம் கூறியுள்ளதாவது: , சர்வதேச யோகா தினத்தை பிரதமர் தலைமையில் காஷ்மீரின் லே பகுதியில் பல்லாயிரகணக்கானோர் பங்கேற்கும் யோகா நிகழ்ச்சி நடத்த முடிவு செய்திருந்தது. , நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், சுகாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு சர்வதேச யோகா தினம், சர்வதேச அளவில், டிஜிட்டல் மூலம் கொண்டாடப்பட உள்ளது. எனினும் ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் மோடி யோகாவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக கலந்து கொள்ளும் நிகழ்ச்சி குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இவ்வாறு அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.


AthibAn Tv