இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் இன்று(ஜூன் 6) காலை 'ஒளிரும் தமிழ்நாடு' என்ற தலைப்பில் 'வீடியோ கான்பரன்ஸ்' மாநாடு நடந்தது. மாநாட்டை துவக்கி வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆற்றிய தலைமையுரை: ஏற்கனவே 17 நிறுவனங்களுடன் ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆலைகள் இயல்பு நிலைக்கு திரும்ப தொழிலதிபர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
கொரோனாவால் வாழ்க்கை முறை மாறியுள்ளது. இயல்பு நிலை நோக்கி தமிழகம் முன்னேறி வருகிறது. தொழில் வளர்ச்சிக்கு தமிழக அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முதன்மை மாநிலமாக தமிழகம் உள்ளது. இன்னும் தமிழகத்தில் பல தளர்வுகள் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
தமிழகத்தின் தொழில் வளம் குறித்த கையேட்டையும் அவர் வெளியிட்டார். மாநாட்டில்இந்திய தொழில் கூட்டமைப்பு தலைவர் ஹரி தியாகராஜன் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவன தலைமை அதிகாரிகள் பங்கேற்றனர்.


AthibAn Tv