வட கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

Dina AthibAn
0
5 நாட்களுக்கு வெளுத்து ...

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனத்தினால் வட கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவ காற்று அதிகரித்து வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தின் சேலம், தர்மபுரி, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். மேலும் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்கள், கோவை, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, சேலம், வேலூர் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வரை வெயில் பதிவாகும்.

நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், விழுப்புரம் மாவட்டம் வல்லம், 12; செஞ்சி, 11; வீரகனுார், ஆரணி, 7; சோளிங்கர், விருதாச்சலம், 5; திருத்தணி, தர்மபுரி, 4 செ.மீ., மழை பெய்துள்ளது. தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபி கடல் பகுதிகளில், பலத்தகாற்று வீசுவதால், வரும், 3ம் தேதி வரை மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!