இந்தியாவில் ஒரே நாளில் 18,522 பேருக்கு கொரோனா; 418 பேர் பலி

Dina AthibAn
0


நாட்டில், ஒரே நாளில், 18 ஆயிரத்து, 522 பேருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 5 லட்சத்து 66 ஆயிரத்து 840 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 418 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 16 ஆயிரத்து 893 ஆகவும் அதிகரித்துள்ளது.

இது குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம், வெளியிட்டுள்ள அறிக்கை: ஒரே நாளில், நாடு முழுதும், 18 ஆயிரத்து, 522 பேருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஐந்து லட்சத்து, 66 ஆயிரத்து 840 ஆக உயர்ந்துள்ளது. 2 லட்சத்து, 15 ஆயிரத்து 125 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 லட்சத்து, 34 ஆயிரத்து 822 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று ஒரே நாளில் 418 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 16 ஆயிரத்து 893 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்திய மருத்துவ கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நேற்று (ஜூன் 29) வரை 86 லட்சத்து 08 ஆயிரத்து 654 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், 2 லட்சத்து 10 ஆயிரத்து 292 பரிசோதனைகள் நேற்று மட்டும் நடந்தது என தெரிவித்துள்ளது.

மாநில வாரியாக பாதிப்பு விவரம்

பாதிப்பில், மஹா., முதலிடத்தில் உள்ளது. 1 லட்சத்து, 69 ஆயிரத்து 883 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 ஆயிரத்து 610 பேர் மரணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 86 ஆயிரத்து 224 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்து 141 பேர் மரணமடைந்துள்ளனர்.
டில்லியில் 85 ஆயிரத்து 161 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்து 680 பேர் மரணமடைந்துள்ளனர்.
குஜராத்தில் 31 ஆயிரத்து 938 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்து 827 பேர் மரணமடைந்துள்ளனர்.
உ.பி.,யில் 22 ஆயிரத்து 828 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 672 பேர் மரணமடைந்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் 17 ஆயிரத்து, 907 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 653 பேர் மரணமடைந்துள்ளனர்.
ராஜஸ்தானில் 17 ஆயிரத்து 660 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 405 பேர் மரணமடைந்துள்ளனர்.
தெலுங்கானாவில் 15 ஆயிரத்து 394 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 253 பேர் மரணமடைந்துள்ளனர்.
கர்நாடகாவில் 14 ஆயிரத்து 210 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 226 பேர் மரணமடைந்துள்ளனர்.
ஹரியானாவில் 14 ஆயிரத்து 210 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 232 பேர் மரணமடைந்துள்ளனர்.
ஆந்திராவில் 13 ஆயிரத்து 891 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 180 பேர் மரணமடைந்துள்ளனர்.
ம.பி.,யில் 13 ஆயிரத்து 370 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 564 பேர் மரணமடைந்துள்ளனர்.
பீஹாரில் 9 ஆயிரத்து 640 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 62 பேர் மரணமடைந்துள்ளனர்.
அசாமில் 7 ஆயிரத்து 752 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 பேர் மரணமடைந்துள்ளனர்.
காஷ்மீரில் 7 ஆயிரத்து 237 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 95 பேர் மரணமடைந்துள்ளனர்.
ஒடிஷாவில் 6 ஆயிரத்து 859 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 23 பேர் மரணமடைந்துள்ளனர்.
பஞ்சாபில் 5 ஆயிரத்து 418 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 133 பேர் மரணமடைந்துள்ளனர்.
கேரளாவில் 4 ஆயிரத்து 189 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 22 பேர் மரணமடைந்துள்ளனர்.
உத்தர்கண்டில் 2 ஆயிரத்து 831 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 39 பேர் மரணமடைந்துள்ளனர்.
சத்தீஸ்கரில் 2 ஆயிரத்து 761 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 பேர் மரணமடைந்துள்ளனர்.
ஜார்கண்டில் 2 ஆயிரத்து 426 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 பேர் மரணமடைந்துள்ளனர்.
திரிபுராவில் ஆயிரத்து 380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 பேர் மரணமடைந்துள்ளனர்.
மணிப்பூரில் ஆயிரத்து 227 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் கூட மரணமடையவில்லை.
கோவாவில் ஆயிரத்து 198 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 பேர் மரணமடைந்துள்ளனர்.
புதுச்சேரியில் 619 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் மரணமடைந்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!