Type Here to Get Search Results !

பணப் புழக்கத்தை அதிகரிக்காமல் பொருளாதாரத்தை மீண்டும் சரி செய்ய முடியாது நிதின் கட்கரி

Saddened That No Major Change In Number Of Road Accidents: Nitin ...

பணப் புழக்கத்தை அதிகரிக்காமல் பொருளாதாரத்தை மீண்டும் சரி செய்ய முடியாது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று, உலகம் முழுவதும் பரவி, பல உயிர்களை காவு வாங்கி வருகிறது. இந்த தொற்றால் மனிதர்கள் மட்டுமல்ல, உலக பொருளாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளால் உலகமே கிட்டத்தட்ட ஸ்தம்பித்து நிற்கும் நிலை ஏற்பட்டதால் பொருளாதாரம் முடங்கியது. உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள அமெரிக்காவும், கொரோனாவால் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தன. இந்தியாவில் பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கையாக வங்கிக்கடன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், பொருளாதாரம் மீட்பது தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியதாவது: வங்கிகள் தொடர்பான பிரச்சினைகளை ஏற்கிறேன். பொருளாதாரத்தில் தேவை மற்றும் விநியோகத்திற்கு பணப் புழக்கம் மிக முக்கிய பங்காற்றுகிறது. தற்போதைய பொருளாதார சூழலில் பணப் புழக்கத்தை அதிகரிக்க செய்ய வேண்டும். தொழில் செய்பவர்களுக்கு கடன் கிடைக்க வேண்டும். இதனை செய்யாமல் பொருளாதாரத்தை மீண்டும் சரி செய்ய முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.