இந்தியா - சீனா இடையே அமைதி திரும்ப வேண்டும் என விரும்புவதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
லடாக் மோதல் சம்பவம் குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: இந்தியா - சீனா எல்லைப்பிரச்னை குறித்து அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது குடும்பங்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கல்கள்.
எல்லையில் இந்திய, சீன படைகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் அமைதி திரும்ப இருநாடுகளும் எடுக்கும் முயற்சியை அமெரிக்கா ஆதரிக்கிறது. ஜூன் 2ம் தேதி, இந்திய பிரதமர் மோடியுடன், அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசி மூலம் கலந்துரையாடிய போது, இந்திய - சீன எல்லை நிலவரம் குறித்து விவாதித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.



AthibAn Tv