முதல்வர் அலுவலக தனிச்செயலாளர் தாமோதரன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்

Dina AthibAn
0
முதல்வரின் தனிச்செயலாளர் ...

தமிழக முதல்வர் அலுவலக தனிச்செயலாளர் தாமோதரன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்

சென்னையில் இதுவரை 34,245 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 18,565 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் 422 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 15,257 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்த பாதிப்பில் 60.09 சதவீதம் ஆண்கள், 39.90 சதவீதத்தினர் பெண்கள், 0.01 சதவீதத்தினர் மூன்றாம் பாலினத்தனவர் உள்ளனர்.

தனிச்செயலர் பலி

முதல்வர் அலுவலக தனிச்செயலர் தாமோதரன், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று (ஜூன் 17) அவர் உயிரிழந்தார்.

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 5,486 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்டையார்பேட்டையில் 4,370 பேரும், தேனாம்பேட்டையில் 4,143 பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக மணலி மண்டலத்தில் 483 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்த பாதிப்பில் 1 சதவீத பேர் உயிரிழந்துள்ளனர், 44 சதவீதம் பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர், 55 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!