
இந்திய வீரர்கள் எல்லை தாண்டி வந்து சீன வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக சீன வெளியுறவு அமைச்சர் கூறியதாக, அந்நாட்டு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள குளோபல் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சீன வெளியுறவு அமைச்சர் கூறியதாக, அந்நாட்டின் குளோபல் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது : இரு நாடுகளுக்கு இடையே, இருந்த ஒரு மித்த கருத்தை மீறி இந்திய வீரர்கள் இரண்டு முறை எல்லை தாண்டி வந்து, சீன வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதினால், கைகலப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக, இந்தியாவிடம் புகார் தெரிவிக்கப்பட்டதுடன், இந்திய ராணுவம் எல்லை தாண்டுவதை தடுத்து நிறுத்துவதுடன், எல்லை பிரச்னையை சிக்கலாக்கும் வகையில் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என தெரிவித்துள்ளோம்.
எல்லையில் நிலவும் பதற்றத்தை குறைக்கவும், எல்லை பகுதிகளில் அமைதி நிலவவும் இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து கொள்ளலாம் என இந்தியா, சீனா நாடுகள் முடிவு செய்துள்ளன. இவ்வாறு அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.


AthibAn Tv