தோடா மாவட்டம் பயங்கரவாதிகள் இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது

Dina AthibAn
0
Hizbul Mujahideen terrorist Burhan Wani killed in J&K encounter ...

பாதுகாப்பு படையினருடன் நடந்த என்கவுன்டரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டதை தொடர்ந்து ஜம்முவில் உள்ள தோடா மாவட்டம் பயங்கரவாதிகள் இல்லாத மாவட்டமாக மாறியுள்ளதாக போலீஸ் டிஜிபி தில்பாக் சிங் கூறியுள்ளார்.

காஷ்மீர் மாநிலம், ஆனந்த்நாக் மாவட்டம், குல்சோஹர் பகுதியில் பாதுகாப்பு படையினருடன் நடந்த என்கவுன்டரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் கமாண்டர் மசூத் உள்ளிட்ட 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

இது தொடர்பாக டிஜிபி கூறுகையில், ஆனந்த்நாக் மாவட்டத்தில், குல்சோஹர் பகுதியில், போலீசாருடன் நடந்த மோதலில், பயங்கரவாத அமைப்பின் கமாண்டர் மசூத் மற்றும் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இதனால், தோடா மாவட்டம் பயங்கரவாதி இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது. தோடா மாவட்டத்தை சேர்ந்த மசூத் மீது பலாத்கார வழக்கு உள்ளது. இதனால், தலைமறைவான அவன், ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பில் இணைந்து, காஷ்மீர் பகுதியில் செயல்பட்டு வந்தான். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!