Type Here to Get Search Results !

இமாச்சல பிரதேசத்திலும், சினையாக இருந்த பசுவுக்கு உணவுடன் வெடிமருந்து கொடுத்ததில், அந்த பசு வாய் சிதைந்து படுகாயமடைந்தது.

latest tamil news

கேரளா யானை சம்பவத்தை தொடர்ந்து தற்போது இமாச்சல பிரதேசத்திலும், சினையாக இருந்த பசுவுக்கு உணவுடன் வெடிமருந்து கொடுத்ததில், அந்த பசு வாய் சிதைந்து படுகாயமடைந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளாவில் யானைக்கு அன்னாச்சி பழத்தில் வெடிமருந்து கொடுத்து கர்ப்பமான யானை படு கொலை செய்யப்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது இமாச்சல பிரதேசத்திலும் இது போல ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிலாஸ்பூர் மாவட்டத்தின் ஜன்துட்டா பகுதியில், சினைப் பசுவுக்கு, கோதுமை மாவு உருண்டைக்குள், வெடி வைத்து கொடுக்கப்பட்டுள்ளது. அதனை கடித்த பசுவின் வாய் சிதைந்து படுகாயமடைந்தது. இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தங்கள் பயிர்களை உண்பதால், நில உரிமையாளர்கள், பசுவை கொல்ல முயன்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.