Type Here to Get Search Results !

8 வயது சிறுமிக்கு #பாலியல்_தொல்லை அளித்து வந்த 4 #முதியவர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காபட்டிணத்தில் வறுமையின் காரணமாக உதவி கேட்டுச் சென்ற 8 வயது சிறுமிக்கு பாலியல்_தொல்லை அளித்து வந்த 4 முதியவர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

அப்பகுதியைச் சேர்ந்த கூலித்_தொழிலாளி ஒருவர் ஊரடங்கால் வேலைக்குச் செல்ல முடியாமல் மனநிலை குன்றிய மனைவி, 8 வயது மகளோடு வசித்து வந்துள்ளார். வறுமை காரணமாக அந்தச் சிறுமி, அந்தத் தெருவிலுள்ள வீடுகளுக்குச் சென்று உதவி கேட்பது வழக்கம் என்று கூறப்படுகிறது.

அப்படி உதவி கேட்டுச் சென்ற வீடுகளில் சிலர் சிறுமிக்கு பண_உதவி செய்துவிட்டு தொடர்ந்து பாலியல்_தொல்லை அளித்து வந்துள்ளனர். அந்த வகையில் அதே பகுதியைச் சேர்ந்த 75 வயதான முகமது நூகு, 52 வயதான சகாயதாசன், 53 வயதான ஜாகீர் உசேன், 66வயதான அப்துல் ஜாபர் ஆகியோரும் 2 சிறுவர்களும் போக்சோ_சட்டத்தின்_கீழ் கைது செய்யப்பட்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.