Type Here to Get Search Results !

கொரோனா சிகிச்சை அளிக்க டெல்லிக்கு 900 படுக்கை வசதியுடன் கூடிய சிறப்பு ரயில்

Great job! Top 5 steps by Indian Railways - trains into isolation ...

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க 900 படுக்கை வசதியுடன் கூடிய சிறப்பு ரயில்களை டில்லிக்கு ரயில்வே வாரியம் அனுப்பியுள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் நோய் பாதிப்பு அதிகமான மாநிலங்களில் மஹா.,முன்னிலையில் உள்ளது. தலைநகர் டில்லியிலும் (குறிப்பாக எல்லை மாவட்டங்களில்) கொரோனா தொற்றின் தாக்கம் சற்று அதிகரித்துள்ளது. இதனால் டில்லியிலும், ஹரியானாவின் எல்லை பகுதியில் உள்ள மாவட்டங்களும் சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் டில்லியில் உள்ள லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் நோய் தொற்றால் பலியானவர்களது உடல்கள் கேட்பாரற்று கிடப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. மாநிலங்களின் நோய் பாதிப்புகளை தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு ரயில்பெட்டிகளில் சிறப்பு படுக்கை வசதிகளை அமைத்து கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்டது. அதன் மூலம் பல நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

தற்போது பல இடங்களிலும் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டதால் மேலும் நோயின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்களை தனி்மைப்படுத்த வேண்டிய நிலை உள்ளது. மேலும், நோய் அறிகுறி இல்லாமலேயே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் டில்லிக்கு சிறப்பு கொரோனா ரயில்களை அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக வடக்கு ரயில்வேயின் தகவல் தொடர்பாளர் தீபக் குமார் கூறுகையில், அதன்படி, 8 ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட ரயில்கள் பெட்டிகள் தயார் நிலையில் உள்ளன. மொத்தம் டில்லிக்கு 500 ரயில் பெட்டிகளை அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது.

அதன்படி ஷாகுர் பஸ்தி பகுதிக்கு 50 ரயில் பெட்டிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதில் 900 படுக்கை வசதிகள் உள்ளன. மேலும் ஏ.சி. அல்லாத 160 படுக்கைகள் கொண்ட 10 பெட்டிகளை தனிப்படுத்துவதற்காகவும், சுகாதாரப் பணியாளர்களுக்காக ஏ.சி. வசதி கொண்ட ஒரு பெட்டி உட்பட ஆனந்த் விஹார் உள்ளிட்ட மற்ற ரயில் நிலையங்களில் நாளை ஒப்படைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.