
லடாகில் நடந்த மோதலில், சீன தரப்பில் உயிரிழப்பு ஏற்பட்டதாக சீன பத்திரிகையசன குளோபல் டைம்ஸ், மூத்த பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வாங் வென்வென் டுவிட்டரில், 'லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவுடன் ஏற்பட்ட மோதலில் 5 சீன வீரர்கள் கொல்லப்பட்டனர்; 11 பேர் காயமடைந்தனர்' என பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து செய்திதாள் தரப்பில் டுவிட்டரில், 'சீனா தரப்பில் எவ்வளவு பேர் பலியாகினர் என்பதை சீன அரசு தெரிவிக்கவில்லை' என பதிவிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து குளோபல் டைம்ஸின் தலைமை ஆசிரியர், 'கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில், சீன தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. சீன அரசின் நிலைப்பாட்டை, இந்தியா பலவீனமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்' என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளதாக, இந்திய அரசு உறுதிப்படுத்தி உள்ளது. சீன தரப்பில் 43 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


AthibAn Tv