
இந்தியாவிலிருந்து, இஸ்ரேல் நாட்டிலுள்ள, ஜெருசலேம் மற்றும் இத்தாலி நாட்டிலுள்ள, ரோம் நகருக்கு, 170 இந்தியர்கள், மூன்று மாதங்களுக்கு முன், புனிதப் பயணம் சென்றனர். மார்ச், 25 முதல், பன்னாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், அவர்கள் அனைவரும், நாடு திரும்ப முடியாமல் தவித்தனர். மத்திய அரசு சிறப்பு விமானங்களை இயக்கி, அங்கு சிக்கித் தவித்தவர்களை மீட்க நடவடிக்கை எடுத்தது.
அதன் அடிப்படையில், ரோம் நகரிலிருந்து, 'கத்தார் ஏர்வேஸ்' சிறப்பு விமானம் இயக்கப்பட்டு, 170 இந்தியர்கள், நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு, சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். இதேபோல, சவுதி அரேபியா நாட்டில் சிக்கித் தவித்த, 150 இந்தியர்கள், அந்நாட்டின் தலைநகர் ரியாத்திலிருந்து, 'ஏர் இந்தியா' சிறப்பு விமானத்தில், சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.


AthibAn Tv