Type Here to Get Search Results !

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30, 152 ஆனது



தமிழகத்தின் தொடர்ந்து 7 வது நாளாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுவரை இல்லாத உச்சமாக இன்று, 1,458 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 30,152 ஆகவும், மேலும் 19 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 251 ஆகவும் அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதாவது:

தமிழகத்தில் இன்று 1,458 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 33 பேர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். ஒரே நாளில் 15,692 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் மட்டும் 5,76, 695 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இன்று 633 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன் மூலம் 16,395 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இன்று 19 பேர் உயிரிழந்துள்ளனர். 13503 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா உறுதியானவர்களில் 11,446 பேர் ஆண்கள். 9,469 பேர் பெண்கள். 17 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள். 12 வயதுவரை உள்ளவர்களில், 1,638 பேரும், 13 முதல் 60 வயது வரை உள்ளவர்களில், 25, 385 பேரும், பிறமாநிலங்களிலிருந்து வந்தவர்கள் 1423 பேரும் உள்நாட்டு விமானம் மூலம் வந்தவர்களில் 35 பேரும் அடங்குவர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.