சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வரும் நிகழ்வே சந்திர கிரகணம், இன்று நள்ளிரவு நிகழ்கிறது 2வது சந்திர கிரகணம்

Dina AthibAn
0
2020.. வருடத்தின் முதல் சந்திர கிரகணம் ...

சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வரும் நிகழ்வே சந்திர கிரகணம். கடந்த ஜனவரி 10-ம் தேதி இரவு 10.37 மணிக்கு துவங்கி 4 மணி நேரம் 5 நிமிடங்கள் நீடித்து மறுநாள் அதிகாலை 2.42 மணிக்கு முடிவடைந்தது. இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவின் அனைத்து பகுதி மக்களும் வெறும் கண்களால் பார்த்தனர்.இது இந்தாண்டின் முதல் சந்திர கிரகணம் என அழைக்கப்பட்டது.

இந்நிலையில், இரண்டாவது பெனும்ப்ரல் சந்திர கிரகணம், இன்று நள்ளிரவு இந்திய நேரப்படி 11.15 மணி முதல், நாளை (சனிக்கிழமை) அதிகாலை 2.34 மணி வரை தெரியும். சுமார் 3 மணி நேரம் 18 நிமிடங்கள் நீடிக்கும் என கூறப்படுகிறது.

கிரகணம் உச்சம் அடையும் நேரத்தில், பூமியின் பெனும்ப்ரல் (புறநிழல்) மட்டுமே சந்திரனின் மீது விழும். அவ்வாறு விழுவதால், சந்திரன் ஸ்ட்ராபெரி பழ வண்ணத்தில் தெரியும். ஆசியா, ஐரோப்பியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்ரிக்கா ஆகிய கண்டங்களில் இந்த கிரகணத்தை பார்க்க முடியும். தெளிவான வானிலை இருக்கும் பட்சத்தில், இந்தியாவில் இந்த கிரகணத்தை முழுமையாகக் காணமுடியும் என கூறப்படுகிறது..

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!