தமிழகத்தின் தொடர்ந்து ஆறாவது நாளாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுவரை இல்லாத உச்சமாக இன்று, 1,438 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 28,694 ஆகவும், மேலும் 12 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 232 ஆகவும் அதிகரித்துள்ளது.
கொரோனாவால் இன்று 12 நபர்கள் இறந்துள்ள நிலையில், இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 232-ஆக உயர்ந்துள்ளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இன்று இறந்த 12 நபர்களில் பெரும்பாலானவர்கள், ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் நாள்பட்ட வியாதிகளான உயர் ரத்தஅழுத்தம், சிறுநீரக கோளாறு, பல உறுப்புகள் செயலற்ற நிலை, மூச்சுதிணறல் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள்என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பாதிப்புக்கு உள்ளான 1,438 நபர்களில் 33 நபர்கள் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள், இலங்கை, துபாய், கத்தார், டெல்லி, ,மகாராஷ்டிரா உள்ளிட்ட இடங்களிலிருந்து தமிழகம் வந்தவர்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதிக பாதிப்புகளை கொண்டுள்ள சென்னை நகரத்தில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,826ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், இன்று ஒரே நாளில் 1,116நபர்களுக்கு பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. சென்னை மாவட்டத்தை அடுத்து, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் செயல்படும் 74 கொரோனா சோதனை மையங்களில், இதுவரை 5, 60,693மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன என்றும் இன்று ஒரே நாளில் 15,692 மாதிரிகள் சோதனைகள் செய்யப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 861 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15,762 ஆக உயர்ந்துள்ளது.


AthibAn Tv