Type Here to Get Search Results !

தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் பட்டியல், இன்று(ஜூன் 15) வெளியீடு

பட்டியலின சமூகத்தவர் தமிழக பா.ஜ.க ...

தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் பட்டியல், இன்று(ஜூன் 15) வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த தமிழிசை, தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்ட பின், புதிய தலைவராக முருகன், மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார்.மாநில துணை தலைவர்கள், பொதுச் செயலர்கள், செயலர்கள், செய்தி தொடர்பாளர்கள், பல்வேறு அணி நிர்வாகிகள், பதவியேற்று மூன்று ஆண்டுகளுக்கு மேலாகிறது.

சமீபத்தில், மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் முடிந்து, புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றனர். அதைத் தொடர்ந்து, மாநில நிர்வாகிகள் நியமனம் இருக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக, புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், இன்று அல்லது நாளை, புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளதாக, பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏற்கனவே உள்ள நிர்வாகிகளில், 50 சதவீதம் பேர் மாற்றப்பட்டு, புது முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாவதால், புதிய நிர்வாகிகள் பட்டியலை, கட்சியினர் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.