Type Here to Get Search Results !

''மின் கட்டணம் 10 மடங்கு விதிக்கப்பட்டுள்ளது என்பது தவறான தகவல்'' மின்துறை அமைச்சர் தங்கமணி

Launch of Smart Mobile Electric Meter Facility soon - Minister P ...


அவர் கூறியதாவது: மின்வாரியத்தில் 'டெக்னிக்கல் அசிஸ்டென்ட்' பணிக்கு ஆள் எடுப்பது ஊரடங்கு முடிந்த பின் அதற்கான பணி துவங்கும். 'கேங்மேன்' பணிக்கு நேர்முகத் தேர்வு முடிந்து ரிசல்ட் வந்திருக்கிறது. அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் தீர்ப்பு வந்தபின் அப்பணிக்கு ஆட்கள் நியமிக்கப்படுவர்.

மின் கட்டணத்தை பொறுத்தவரை ஜனவரியில் என்ன கட்டணமோ அதை செலுத்த வேண்டும் என சொல்லியிருந்தோம். இப்போது புதிதாக கணக்கு எடுக்கிறோம். ஏற்கனவே இரண்டு மாதங்களுக்கும் தற்போது எடுத்த இரண்டு மாதங்களும் சேர்த்து நான்கு மாதமாகிறது. அந்த நான்கு மாதத்துக்கும் இரண்டு மாதத்துக்கு உண்டானதை யூனிட் பிரித்து கணக்கிட்டு மின் நுகர்வோருக்கு பில் தொகையை அனுப்பி வருகிறோம். மின் கட்டணம் 10 மடங்கு விதிக்கப்பட்டுள்ளது என்பது தவறான தகவல்.

ஊரடங்கால்அனைவரும் வீட்டில் இருந்ததால் மின் தேவை அதிகரித்துள்ளது. நடிகர் பிரசன்னாவுக்கு ஏற்கனவே மின்வாரியம் வாயிலாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அவரை பொறுத்தவரை 6920 யூனிட் மின்சாரம் பயன்படுத்தி இருக்கிறார். அதை இரண்டாக பிரித்து 42 ஆயிரம் ரூபாயும் அதற்கு முன் அவர் 13 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்டாமல் இருந்த காரணத்தால் மொத்தமாக கட்ட சொல்லியிருந்தோம். அதற்கான விளக்கமும் அளிக்கப்பட்டது. அதையும் அவர் ஏற்றுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.