கடந்த ஆறு ஆண்டுகளில் பல வரலாற்று தவறுகளை பிரதமர் மோடி சரி செய்துள்ளார்

Dina AthibAn
0

பா.ஜனதா எம்.பி.க்களுக்கு 2 நாள் ...

கடந்த ஆறு ஆண்டுகளில் பல வரலாற்று தவறுகளை பிரதமர் மோடி சரி செய்துள்ளார் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மோடி, இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்று ஒராண்டு நிறைவுபெற்றுள்ளார். இது குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:
வரலாற்று சாதனைகள் நிறைந்த மோடியின் 2வது ஆட்சிக்காலத்தின் ஒரு வருட வெற்றிகரமான பதவிக்காலத்தில், நாட்டின் பிரதமர் மோடியை மனதார வாழ்த்துகிறேன். உங்கள் தொலைநோக்கு மற்றும் தீர்க்கமான தலைமையின் கீழ், இந்தியா தொடர்ந்து இதேபோல் முற்போக்கானதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த ஆறு ஆண்டுகளில் மோடி, பல வரலாற்று தவறுகளை சரிசெய்தது மட்டுமல்லாமல், தற்சார்பு கொண்ட இந்தியாவை உருவாக்க கடந்த 60 ஆண்டுகளாக உள்ள வெற்றிடத்தையும் அவர் நிரப்பியுள்ளார். கடந்த ஆறு ஆண்டு கால ஆட்சி என்பது, ஏழைகளின் நலனுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக அமைந்துள்ளது.

நேர்மையான தலைமை மற்றும் அயராத கடின உழைப்பின் பிரதிபலிப்புகள், நாட்டு மக்கள் தலைமையின் வைத்துள்ள நம்பிக்கை, உலகில் அரிதாகவே காணப்படுகிறது. அதேபோல் பிரதமர் மோடியை தேர்ந்தெடுத்து நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களித்த நாட்டு மக்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். பாஜ.,வின் அயராத கடின உழைப்பு, அரசின் சாதனைகள் மற்றும் பொது நலத் திட்டங்கள் குறித்து வீடு வீடாக சென்று பரப்பிய கோடிக்கணக்கான பாஜ., தொண்டர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

?

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!