பைலட்டிற்கு கொரோனா உறுதியானதால், அந்த விமானம், பயணிகளின்றி நாடு திரும்பியது

Dina AthibAn
0
பைலட்டுக்கு கொரோனா பாதிப்பு ...

ரஷ்யாவில் தவித்த இந்தியர்களை அழைத்து வர சென்ற விமானத்தின் பைலட்டிற்கு கொரோனா உறுதியானதால், அந்த விமானம், பயணிகளின்றி நாடு திரும்பியது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தவித்த இந்தியர்களை அழைத்து வருவதற்காக, வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா விமானம் ஒன்று டில்லியில் இருந்து கிளம்பியுள்ளது. உஸ்பெகிஸ்தான் விமானப்படை தளத்தில் விமானம் தரையிறங்கிய உடன், நடந்த பரிசோதனையில் விமானத்தின் பைலட்களில் ஒருவருக்கு கொரோனா உறுதியானது. இது குறித்து தகவல் அறிந்த ஏர் இந்தியா நிர்வாகம், அந்த விமானத்தை உடனடியாக தாயகம் திரும்ப உத்தரவிட்டது.

இதனால், அந்த விமானம், அதில் இருந்து ஊழியர்களுடன் இன்று(மே30) நண்பகல் 12:30 டில்லி திரும்பியது. விமான ஊழியர்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.மாஸ்கோவில் உள்ள இந்தியர்களை அழைத்து வர மற்றொரு விமானம் அனுப்பி வைக்கப்படும் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!