
''இந்தியாவின் விரிவாக்க கொள்கைகள், அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தல் அளிப்பவையாக உள்ளன,'' என, பாக்., பிரதமர், இம்ரான் கான் புலம்பியுள்ளார்.
இதுதொடர்பாக, அவர் 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது:இந்திய அரசின் விரிவாக்க கொள்கைகள், அண்டை நாடுகளை, அச்சுறுத்துகின்றன. வங்க தேசத்துடன் குடியுரிமை சட்டம் வாயிலாகவும், சீனா மற்றும் நேபாளத்துடன், எல்லை மோதல்களாலும், பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.
அத்துடன், போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்துவதாக, பாக்., மீது பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தி, பிரச்னைகளை ஏற்படுத்த முயற்சிக்கிறது. காஷ்மீரை சட்டவிரோதமாக தன்னுடன் இணைத்துள்ளது, இந்தியா செய்துள்ள போர் குற்றமாகும்.நாட்டில் உள்ள சிறுபான்மையினருக்கு மட்டுமின்றி, பிராந்திய அமைதிக்கும், இந்தியா அச்சுறுத்தல் விடுக்கிறது.இவ்வாறு, இம்ரான் புலம்பியுள்ளார்.


AthibAn Tv