Type Here to Get Search Results !

ஊட்டியை மிரட்ட வந்த கொடூர வெட்டுக்கிளிகள்

வெட்டுக்கிளிகள் நடத்தும் உலகப் ...

கிழக்கு ஆப்ரிக்காவின் பாலைவனப்பகுதியிலிருந்து கிளம்பி கண்டம் விட்டு கண்டம் தாக்கும் கொடூர வெட்டுக்கிளிகள் தற்போது ஊட்டி காந்தள் பகுதியில் காணப்பட்டதால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

ஆப்பிரிக்க, அரேபிய நாடுகளைத் தாக்கிய வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இந்தாண்டு இந்திய மாநிலங்கள் சிலவற்றிலும் கடும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வடமேற்கு மாநிலங்களைத் தாக்கிய இந்த வெட்டுக்கிளிகள் தமிழகத்தைத் தாக்காது என்று தமிழக வேளாண் துறை சொல்லியிருந்த நிலையில், கேரளா மாநிலம் வயநாடு பகுதிவழியாக வந்து ஊட்டியில் காணப்பட்டதால் அதை பாட்டிலில் அடைத்து அதை காட்டிய ஒருவர் அது குறித்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அவர்களிடம் தெரிவித்ததை அடுத்து அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.

ஆப்ரிக்க நாடுகளான, கென்யா, எத்தியோப்பியா, சோமாலியாவிலிருந்து வந்த இந்த வெட்டுக்கிளியின் பெயர்' ஹீலிபேரா 'என அழைக்கப்படுகின்றன. அங்கிருந்து புறப்பட்டு வந்த வெட்டுக்கிளிகள் பாகிஸ்தான் சென்று அங்கிருந்து இந்தியாவுக்குள் நுழைந்து மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உ.பி., என படையெடுத்து விவசாயிகளுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தின. இந்நிலையில் இந்த வெட்டுக்கிளிகள் கேரளாவின் வயநாட்டிலும் தமிழ்நாட்டின் ஊட்டி காந்தள் பகுதியில் காணப்படுகிறது. இந்த வெட்டுக்கிளிகள் ஒரு சதுர கி.மீட்டருக்கு 8 கோடி வரை படையெடுக்கும் தன்மை கொண்டதால் நீலகிரி மாவட்ட விவசாயிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.