“புதிய கிராமப்புற வேலை உறுதி திட்டம் மாநிலங்களின் நிதிச் சுமையை அதிகரிக்கும்” - முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!

Dina AthibAn
0

“புதிய கிராமப்புற வேலை உறுதி திட்டம் மாநிலங்களின் நிதிச் சுமையை அதிகரிக்கும்” - முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!

சென்னை: மத்திய அரசு இன்று முதல் நாடு முழுவதும் அமல்படுத்தியுள்ள ‘விக்சித் பாரத் - ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத இயக்கம்’ (VB-GRAM-G) புதிய திட்டத்திற்குத் தமிழக முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இத்திட்டம் மாநிலங்களின் நிதிச் சுமையைக் கணிசமாக அதிகரித்து, நிதிச் சுயாட்சியைப் பலவீனப்படுத்தும் என அவர் எச்சரித்துள்ளார்.

100% மத்திய நிதி என்ற நிலை பறிபோனது

மத்திய அரசின் புதிய 125 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் குறித்து தங்கம் தென்னரசு தனது அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான சட்டம்: "முன்பிருந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் (MGNREGA) செயல்படுத்தப்பட்டபோது, அதற்கான முழு நிதிப் பொறுப்பையும் மத்திய அரசே ஏற்றிருந்ததால் மாநிலங்களின் நிதிச் சுமை கட்டுக்குள் இருந்தது. ஆனால், தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள புதிய விபி-கிராம்-ஜி (VB-GRAM-G) திட்டத்தின் மூலம், மாநில அரசுகளின் மீது கூடுதல் நிதிப் பொறுப்புகள் திட்டமிட்டுச் சுமத்தப்பட்டுள்ளன."

ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் பொறுப்புகளை நியாயமான முறையில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற கூட்டாட்சியின் அடிப்படை நோக்கத்திற்கு மாறாக, இப்புதிய திட்டத்தில் மாநிலங்களின் நிதிப் பங்களிப்பை 40 சதவீதமாக (60:40 என்ற விகிதத்தில்) கட்டாயமாக்கியிருப்பது மாநிலங்களின் சொந்த வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நிதி மேலாண்மையின் மீது கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தவெக அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

தமிழகத்தில் தற்போதைய தவெக அரசு இந்தத் திட்டத்தை எந்தவித எதிர்ப்புமின்றி அப்படியே செயல்படுத்த முற்பட்டால், அது தமிழ்நாட்டின் நிதி நலன்களையும், மாநில உரிமைகளையும் மொத்தமாகப் பாதுகாக்கத் தவறிய செயலாகவே முடியும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

எனவே, தமிழ்நாட்டின் நிதி உரிமைகளைப் பறிக்கும் மற்றும் மாநில நலன்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இப்புதிய திட்டத்தின் நிதிப் பகிர்வு போன்ற அம்சங்கள் குறித்து, ஒன்றிய அரசிடம் முதல்வர் ச.ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு வலுவான எதிர் நிலைப்பாட்டை எடுத்துத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும் என முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!