Type Here to Get Search Results !

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன் நியமனம்

 சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவனை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்கபூர்வாலா கடந்த ஆண்டு மே 28ஆம் தேதி பதவியேற்றார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஓராண்டு காலம் பணியாற்றிய கங்கபூர்வாலா நாளை ஓய்வு பெறுகிறார்.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவனை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமித்துள்ளார். எஸ்.வி.கங்கபூர்வாலா நாளை ஓய்வு பெறுகிறார், மூத்த நீதிபதி மகாதேவன் தற்காலிக தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளை மறுநாள் முதல் அவர் பணிகளை கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.