கோடை வெயில் அதிகரித்துள்ளதால், தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி தீவிரம்

Dina AthibAn
0

 கோடை வெயில் அதிகரித்துள்ளதால், தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி தீவிரமடைந்துள்ளது.

தூத்துக்குடியில் கோடை வெயில் அதிகரித்துள்ளதால், மாவட்டத்தின் முக்கிய தொழிலான உப்பு உற்பத்தி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தருவைகுளம், வேப்பலோடை, ஆறுமுகனேரி, முல்லைக்காடு, பெரியசாமிபுரம் போன்ற பகுதிகளில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இத்தொழிலில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் உப்பளங்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தன. இதனால் வழக்கமாக ஜனவரியில் துவங்கிய உப்பு உற்பத்தி இந்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கியது. உப்பு உற்பத்தி துவங்கியிருந்தாலும், கடந்த சில நாட்களாக பெய்த கோடை மழையால் மீண்டும் உற்பத்தி பாதிக்கப்பட்டது. தற்போது தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதால் உப்பு உற்பத்தியும் அதிகரித்துள்ளது.

உற்பத்தியாளர்கள் கூறுகையில், கடந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட உப்பு, டன் ஒன்று, 4,000 ரூபாய்க்கும், தற்போது உற்பத்தி செய்யப்படும் புதிய உப்பு, டன்னுக்கு, 2,000 ரூபாய் முதல், 1,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம், உப்பு உற்பத்தி தாமதமாக தொடங்குவதால், இந்த ஆண்டு உப்பு உற்பத்தி குறைய வாய்ப்புள்ளதாக, உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!