பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை தொடக்கம்...

Dina AthibAn
0

 பள்ளி மாணவர்களுக்கு இன்று (புதன்கிழமை) முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடந்து முடிந்துள்ளது. அதன்பின், 1ம் வகுப்பு முதல், 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஆண்டு இறுதி தேர்வு துவங்கியது.நாடாளுமன்ற தேர்தலையொட்டி, ஆண்டு இறுதி தேர்வை விரைந்து முடிக்க, கல்வித்துறை திட்டமிட்டு, அதன்படி அட்டவணையை வெளியிட்டு, தேர்வை நடத்தியது. . அட்டவணைப்படி, 12ம் தேதி தேர்வு முடிவடைய இருந்தது.

ஆனால் ரம்ஜான் பண்டிகையையொட்டி 4 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு 10 மற்றும் 12ம் தேதிகளில் நடைபெற இருந்த அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வுகள் 22 மற்றும் 23ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அவை தவிர 1 முதல் 3ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கடந்த 6ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது.

கல்வித்துறை அறிவித்துள்ள அட்டவணைப்படி, தேர்தலுக்கு பின், நேற்று முன்தினம் (22ம் தேதி), நேற்றும் (23ம் தேதி) 4 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வுகள் நடத்தப்பட்டன.

தேர்வு முடிந்துள்ளதால், மாணவர்களுக்கு கோடை விடுமுறை இன்று (புதன்கிழமை) முதல் துவங்குகிறது. விடுமுறை முடிந்து பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? இதற்கான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.அதன் பின்னரே பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் தற்போது கோடை காலம் என்பதால் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் பட்சத்தில் பள்ளிகள் திறப்பது மேலும் தாமதமாகும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!