சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் சீராக இயங்கியதால் அமித்ஷா உயிர் தப்பினார்

Dina AthibAn
0

 ஹெலிகாப்டர் புறப்பட்டதும், சிறிது நேரத்தில் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.

நாடாளுமன்ற தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடந்து வரும் நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷா நாட்டின் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்து வருகிறார்.

பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில் தேர்தல் பிரசாரத்தை முடித்த அமித்ஷா ஹெலிகாப்டர் பயணம் மேற்கொண்டார். ஹெலிகாப்டர் புறப்பட்டதும் கட்டுப்பாட்டை இழந்து வானில் நின்றது. சிறிது நேரத்தில் ஹெலிகாப்டர் வானத்தில் சீராக பறந்தது. சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் சீராக இயங்கியதால் அமித் ஷா உயிர் தப்பினார்.

தொழில்நுட்பக் கோளாறால் ஹெலிகாப்டர் சிறிது நேரம் கட்டுப்பாட்டை இழந்ததா அல்லது காற்றின் தாக்கத்தால் அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!