இன்றைய ஐ.பி.எல் கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா - பஞ்சாப் அணிகள் மோதல்

Dina AthibAn
0

 இன்றைய ஐ.பி.எல் கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

10 அணிகள் மோதும் 17வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் 42வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

முன்னாள் சாம்பியனான கொல்கத்தா அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி (ஐதராபாத், பெங்களூரு (2 முறை), டெல்லி, லக்னோ) மற்றும் 2 தோல்வி (சென்னை, ராஜஸ்தான்) என 10 புள்ளிகளுடன் வலுவான நிலையில் உள்ளது. நடப்பு தொடரில் கொல்கத்தா அணி 4 முறை 200 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது.

அதே நேரத்தில் பஞ்சாப் அணி 8 ஆட்டங்களில் 2 வெற்றி, 6 தோல்வி கண்டுள்ளது. இதில் கடந்த 4 ஆட்டங்களில் தொடர் தோல்விகளும் அடங்கும். மீதமுள்ள 6 ஆட்டங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் நிலையில் நீடிக்க முடியும். இவ்விரு அணிகளும் இதுவரை 32 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. 21 ஆட்டங்களில் கொல்கத்தாவும், 11 ஆட்டங்களில் பஞ்சாப் அணியும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!