சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே

Dina AthibAn
0

 வரும் 28ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் போட்டியில் சென்னை - ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

10 அணிகள் கொண்ட 17வது ஐபிஎல் சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 28ம் தேதி சென்னை- ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் வரும் 25ம் தேதி (நாளை மறுநாள்) விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, Paytm மற்றும் www.insider.in ஆகிய இணையதளங்களில் காலை 10.40 மணிக்கு நடைபெறும் என சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

குறைந்தபட்சம் ரூ.1700 முதல் அதிகபட்சமாக ரூ.6000 வரை டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை முழுவதும் ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!