கிளர்ச்சியில் ஈடுபட்டதாகக் கூறி 56 குழந்தைகள் உட்பட 223 பேர் ராணுவத்தால் சுட்டுக் கொலை

Dina AthibAn
0

 கிளர்ச்சியில் ஈடுபட்டதாகக் கூறி 56 குழந்தைகள் உட்பட 223 பேர் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஆப்ரிக்க நாடான புர்கினா பாசோவில் உள்ள குறிப்பிட்ட சில கிராமங்களில் போராட்டக்காரர்கள் குழு ஒன்று அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தவும் கிளர்ச்சி செய்யவும் திட்டமிட்டுள்ளதாக ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு இராணுவத்தினர் குவிக்கப்பட்டு சந்தேக நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி, அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்ததற்காக நந்தீன் மற்றும் சோரா கிராமங்களில் 56 குழந்தைகள் உட்பட 223 பேரை அந்நாட்டு ராணுவம் சுட்டுக் கொன்றது. மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் பிப்ரவரியில் மனித உரிமைகளை மீறிய பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!