பிரதமர் மோடி 4-வது முறையாக இன்று கர்நாடகா வருகை

Dina AthibAn
0

 கர்நாடகாவில் மே 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் செய்வதற்காக பிரதமர் மோடி 4-வது முறையாக இன்று (சனிக்கிழமை) கர்நாடகா வருகிறார். பெங்களூரு சிக்பல்லாபூரில் பிரச்சாரம் செய்து ஆதரவு திரட்ட உள்ளார்.

கர்நாடகாவில் மே 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.இந்த முதல் கட்ட தேர்தல் பெங்களூரு உள்ளிட்ட 14 தொகுதிகளில் நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் 247 பேர் உள்ளனர். இந்த தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து பிரதமர் மோடி 3 முறை கர்நாடகா சென்று பிரசார கூட்டங்கள், வாகன பேரணிகளில் பங்கேற்று வருகிறார். அதாவது கலபுரக்கி, சிவமொக்கா, மைசூர், மங்களூரு ஆகிய இடங்களில் வாக்கு சேகரித்தார். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி 4-வது முறையாக இன்று (சனிக்கிழமை) மீண்டும் கர்நாடகா வருகிறார்.

சிறப்பு விமானம் மூலம் கர்நாடகா வரும் அவர், சிக்பல்லாபூரில் நடைபெறும் பாஜக பிரசார கூட்டத்தில் பேசுகிறார். அதை முடித்துவிட்டு மாலை 6 மணிக்கு பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடைபெறும் பாஜக பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

இதில் பெங்களூருவில் உள்ள 4 தொகுதிகளின் வேட்பாளர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும், முன்னாள் முதல்வர் எடியூரப்பா, கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். பிரதமர் மோடி வருகையையொட்டி பெங்களூரு மற்றும் சிக்பள்ளாப்பூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியை தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.

24ம் தேதி உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சிக்கமகளூரு, உடுப்பி உள்ளிட்ட நகரங்களில் வாக்கு சேகரிக்கிறார். கர்நாடகாவில் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் தலைவர்களின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. ஆதரவு திரட்டுவதற்காக கட்சிகளின் தேசிய தலைவர்கள் கர்நாடகத்தை முற்றுகையிட்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!