தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் தொழில்நுட்ப உதவியுடன் உறுதி செய்ய வேண்டும், பிரதமர் மோடி

Dina AthibAn
0
PM Modi Hands Over Social Media Accounts to Mark Women's Day ...

கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால், அதை மக்களுக்கு அளிப்பதற்கான வழிமுறைகளை வகுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம், பிரதமர் மோடி தலைமையில், டில்லியில் நேற்று நடந்தது.

இது தொடர்பாக, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: இந்தக் கூட்டத்தில், பிரதமர் மோடி, நான்கு முக்கிய அம்சங்களை முன் வைத்தார். முதலில், வைரசால் அதிகம் பாதிக்கக் கூடிய அபாயம் உள்ளவர்களை அடையாளம் காண வேண்டும். உதாரணத்துக்கு, டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்டோர்.

அடுத்ததாக, எவருக்கும், எந்த இடத்திலும் இந்த மருந்து கிடைப்பதற்கான வழிமுறைகளை உருவாக்கவேண்டும். மூன்றாவதாக, அனைத்து தரப்பு மக்களும் வாங்கும் விலையில் இந்த தடுப்பூசி இருக்க வேண்டும். நான்காவது, தடுப்பூசி தயாரிப்பில் இருந்து, அது மக்களை சென்றடைவதை, தொழில்நுட்ப உதவியுடன் உறுதி செய்ய வேண்டும் என, பிரதமர் வலியுறுத்தியுள்ளார். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!