சாத்தான்குளத்தில் தந்தை, மகன் அடித்து கொன்ற விவகாரத்தில் குற்றவாளிகள் அனைவருக்கும் கண்டிப்பாக தண்டனை கிடைத்தே ஆக வேண்டும் என நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவு:தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாகக் கொன்றதை மனித இனுமே எதிர்த்து கண்டித்த பிறகும், போலீஸ் ஸ்டேசனில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில போலீசார் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக்கூடாது. சத்தியமா விடவே கூடாது என தெரிவித்துள்ளார்.
— Rajinikanth (@rajinikanth) July 1, 2020

AthibAn Tv