டிக் டாக்கிற்கு வேடிக்கையாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

Dina AthibAn
0


தேசத்தின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி, சீனாவின் 'டிக் டாக், ஹெலோ ஷேர்இட்' உள்பட, 59 செயலிகளுக்கு இந்திய அரசு நேற்று தடை விதித்தது.

ஏற்கனவே, இந்திய அரசு தடை விதித்த, 'கேம் ஸ்கேனர், ஷேர் இட்' உள்ளிட்ட பல செயலிகள் இன்னும் 'ப்ளே ஸ்டோரில்' கிடைக்கின்றன. இச்சூழல், சமூக ஊடகமான 'டிக் டாக், ஹெலோ ஆப்'கள் முழுவதுமாக முடக்கப்பட்டுள்ளன. ஆப் ஸ்டோர்களிலிருந்தும் அவை நீக்கப்பட்டுள்ளன.

ஆனால், டிக் டாக் மற்றும் ஹெலோ நிறுவனங்கள் தங்களது செயலிகளை முடக்க வேண்டாம் எனக் கோரி வருகின்றன. மேலும், 'தனிநபர் தரவுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் இந்திய சட்டங்களுக்கு இணைந்து தொடர்ந்து செயல்பட தயாராக உள்ளோம். இந்திய பயனாளர்களின் எந்த ஒரு தரவுகளையும் நாங்கள் சீனா உள்பட எந்த ஒரு நாட்டுடனும் பகிர்ந்து கொள்வது கிடையாது. கோரிக்கை வரும் பட்சத்தில் வரும் காலத்தில் இதே அணுகுமுறையை பின்பற்ற தயாராக இருக்கிறோம்' என்று டிக் டாக் கூறியதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், டிக் டாக்கிற்கு இளைஞர்கள் சமூக வலைதளமான டுவிட்டரில் வேடிக்கையாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். RipTiktokIndia என்ற ஹாஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. இந்த ஹாஷ்டேகின் கீழ் ஏராளமான பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!