CBSC தேர்வுகளை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்குமாறு : சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

Dina AthibAn
0
CBSE Exams 2020 | சிபிஎஸ்இ 10, 12 வது ...

 10 மற்றும் 12ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., மாணவர்கள் எழுத வேண்டிய மீதமுள்ள தேர்வுகளை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்குமாறு சி.பி.எஸ்.இ.,க்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பிப்ரவரி மாதம் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வும், மார்ச் மாதம் 10-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளும் தொடங்கியது. இந்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது ஒத்திவைக்கப்பட்ட 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளை ஜூலை 1 முதல் ஜூலை 15 வரை நடத்த சிபிஎஸ்இ முன்பு திட்டமிட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போதைய சூழ்நிலையில் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி அமித் பத்லா என்பவர் பெற்றோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை இன்று (ஜூன் 17) விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் மீதமுள்ள தாள்களைத் ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கவும், இன்டர்னல் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கவும் அறிவுறுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!