
அசாம் மாநிலம் பாக்ஜன் எரிவாயுக் கிணற்றில் பற்றி எரியும் தீயினை கட்டுப்படுத்த அமெரிக்க எரிசக்தி வல்லுநர்களிடம் இந்திய அதிகாரிகள் காணொளியில் ஆலோசித்தனர்.
அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டத்தில் பாக்ஜன் எரிவாயுக்கிணற்றில் கடந்த 27 ம் தேதி வாயுக் கசிவு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த 10ம் தேதி கிணற்றில் தீ ஏற்பட்டது. தீயணைப்பு முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் இருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆனாலும், தொடர்ந்து கட்டுக்கடங்காமல் எரியும் தீயினைக் கட்டுப்படுத்துவது, எரிவாயுக்கிணற்றினை மூடுவது குறித்து அமெரிக்க எரிசக்தி வல்லுநர்களுடன் பெட்ரோலிய அமைச்சகத்தின் அதிகாரிகள் காணொளியில் விவாதித்தனர். கடந்த வெள்ளியன்று நடந்த ஆலோசனையின் போது சிங்கப்பூரைச் சேர்ந்த வல்லுநர்களும் பங்கேற்றனர். அமெரிக்கா இடையே எரிசக்தி துறையில் செய்து கொண்ட உடன்பாட்டின்படி இந்த கலந்துரையாடல் நடந்ததாக கூறப்படுகிறது.


AthibAn Tv