
இந்தியா - சீனா எல்லையின் லடாக் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க, இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள், நாளை மறுநாள் சந்தித்து பேச திட்டமிட்டுள்ள நிலையில் காஷ்மீரின் ஆனந்தநாக் பகுதியில் தற்காலிக விமானப்படை தளம் அமைப்பதற்கான பணியை மத்திய நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டு வருகிறது.
இது தொடர்பாக என்.எச். ஏ.ஐ., எனப்படும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் காஷ்மீரின் ஆனந்தநாக் மாவட்டம் பிஜ்பெஹாரா என்ற பகுதியில் 3.5 கி.மீ., சுற்றளவிற்கு தற்காலிக விமானப்படை தளத்தை அமைக்கும் பணியை துவக்கியுள்ளது.
அவசர காலங்களில் இந்த விமானப்படை தளத்திலிருந்து வான்வழி தாக்குதல் நடத்துவதற்காக பல்வேறு ரக போர் விமானங்கள், தரையிறக்கவும், இயக்கவும், தேவையான எரிபொருளை நிரப்பிக்கொள்வதற்கு உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளுடன் கட்டப்பட்டு வருகின்றன.

AthibAn Tv