இந்தியாவை பிரான்ஸ் தனது நட்பு நாடாகவே பார்க்கிறது பாதுகாப்பு அமைச்சர் லாரன்ஸ் பார்லி

Dina AthibAn
0


பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் லாரன்ஸ் பார்லி கடந்த திங்களன்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கடிதம் எழுதினார். அதில் முன்னதாக இந்திய-சீன எல்லைப்பகுதியில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்ததற்கு இரங்கல் தெரிவித்து கடிதம் எழுதி இருந்தார்.

இந்தியாவும் பிரான்சும் நல்ல நட்புறவுடன் விளங்குவதாகவும் லடாக் பகுதியில் ஏற்பட்ட சோகத்திற்கு பிரான்ஸ் மிகவும் வருந்துவதாகவும் புளாரன்ஸ் தனது கடிதத்தில் தெரிவித்திருந்தார். பிரான்ஸ் எப்போதும் இந்தியாவின் பக்கம் நிற்கும் என பார்லி ராஜ்நாத் சிங்கிடம் தெரிவித்துள்ளார். இறந்துபோன இந்திய வீரர்களின் குடும்பங்களுக்கு பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் புளாரன்ஸ் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளாக இந்திய விமானப்படைக்கு போர் விமானங்களைத் தயாரித்து விற்பனை செய்துவரும் பிரான்ஸ், இந்தியாவின் ராணுவத்திற்கு எப்போதும் தனது ஆதரவைத் தெரிவித்து வருகிறது. தனது தொழில் பங்குதாரர் என்பது மட்டுமல்லாமல் இந்தியாவை பிரான்ஸ் தனது நட்பு நாடாகவே பார்க்கிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!