சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக நீதிபதி விசாரணைக்கு போலீசார் ஒத்துழைக்கவில்லை

Dina AthibAn
0


சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக நீதிபதி விசாரணைக்கு போலீசார் ஒத்துழைக்கவில்லை. இதனால், போலீஸ் ஸ்டேசனை வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், 60; மகன் பென்னிக்ஸ், 31, ஊரடங்கு காலத்தில் கடையை திறந்ததாக கூறி போலீசார் கைது செய்தனர். கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர். அவர்களை போலீசார் தாக்கியதில், படுகாயமடைந்த அவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, இந்த சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கை இன்று மீண்டும் விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, தந்தை மற்றும் மகன் மரணம் தொடர்பான மாஜிஸ்திரேட் விசாரணைக்கு, போலீசார் ஒத்துழைக்கவில்லை. வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேசன் கொண்டு வர வேண்டும். அந்த போலீஸ் ஸ்டேசனுக்கு வருவாய்த்துறை அதிகாரியை பொறுப்பு அதிகாரியாக நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!