Type Here to Get Search Results !

விவசாயிகளின் வருவாயை பெருக்கும், அத்தியாவசிய பொருட்கள் சட்ட திருத்தத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

விதை வெங்காயம் விலை உயர்வு | Dinamalar

விவசாயிகளின் நலனுக்காக 'ஒரு நாடு ஒரே சந்தை'யை ஏற்படுத்தும் வகையில் அத்தியாவசிய பொருட்களுக்கான சட்டத்தில் திருத்தத்தை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கு மத்திய அமைச்சரவையும் சில நாட்களுக்கு முன் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், இச்சட்டத்திருத்தத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து இச்சட்டம் உடனடியாக அமலானது.

அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை மாற்றுவதற்கான முயற்சிகள் கடந்த காலங்களிலும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவை வெற்றி பெறவில்லை. இந்நிலையில், இச்சட்டத்தை பிரகடனப்படுத்தியதன் மூலம் விவசாயிகளின் நலனுக்காக, பல விவசாய பொருட்கள் இச்சட்டத்தின் வரம்பிலிருந்து விலக்கப்படும். விவசாயிகளின் பணிகள் எளிமையாக்கப்படுவதோடு அவர்களின் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும்.

எண்ணெய் வித்துகள், சமையல் எண்ணெய், வெங்காயம் மற்றும் உருளை ஆகியவவை அத்தியாவசிய பொருட்களில் இருந்து விலக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் விவசாயிகள் பெரிதும் பயனடைவார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.