'சூப்பர் நிசர்கா' புயல் இன்று பகல் கரையை கடக்கும்' என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Dina AthibAn
0
நிசர்கா புயல்:மகாராஷ்டிரா ...

'தென் மேற்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள 'சூப்பர் நிசர்கா' புயல் இன்று பகல் மஹாராஷ்டிரா மற்றும் குஜாராத் இடையே கரையை கடக்கும்' என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1882ம் ஆண்டுக்கு பின் மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையை புயல் தாக்க உள்ளது. தென் மேற்கு பருவமழை நேற்று முன்தினம் துவங்கியது. இந்தநிலையில் தென்கிழக்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதி மற்றும் அதையொட்டியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது.இது புயலாக வலுப்பெற்று வடக்கு வடமேற்கு திசையில் 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.

'சூப்பர் நிசர்கா' என பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் இன்று பகல் மகாராஷ்டிரா
மற்றும் குஜாராத் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மஹாராஷ்டிராவின் மும்பை பால்கர் தானே ராய்காட் ஆகிய பகுதிகளிலும் கோவா மற்றும் குஜராத் மாநிலங்களிலும் மணிக்கு 115 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.

குறிப்பாக மும்பைக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் 'சூப்பர் நிசர்கா' புயலை எதிர்கொள்ள தேவையான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை முடுக்கி விடப்படுள்ளது.
ஏற்கவே கொரோனா தொற்றால் நிலைகுலைந்துள்ள மும்பையை இன்று புயல் தாக்க உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.கடந்த 1882ம் ஆண்டுக்குப் பின் மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையை புயல் தாக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் நரேந்திர மோடி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநில முதல்வர்களுடன் நேற்று பேசினார்.அவர் 'டுவிட்டரில்' வெளியிட்ட பதிவில் 'இந்தியாவின் மேற்கு கடற்பகுதியில் உருவாகியுள்ள புயலால் ஏற்பட்டுள்ள நிலைமையை அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது.
ஒவ்வொருவரும் நலமுடன் இருக்க இறைவனை வேண்டுவோம்' என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!