
நமது மருத்துவ பணியாளர்கள் கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரோனா வைரசை வெற்றிக்கொள்ளும் வல்லமை படைத்தவர்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் உள்ள ராஜிவ் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் வெள்ளிவிழா கொண்டாட்டங்களை காணொலி மூலமாக பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர், மருத்துவ பணியாளர்களிடம் அவர் பேசியதாவது:
வரவிருக்கும் காலங்களில் இந்த பல்கலைக்கழகம் சிறப்பான புதிய உயரங்களை தொடர்ந்து அளிக்கும் என்று நான் நம்புகிறேன். இத்தகைய நேரத்தில், நம் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் விஞ்ஞான சமூகத்தை உலகமே நம்பிக்கையுடனும் நன்றியுடனும் பார்க்கிறது. உங்களிடமிருந்து 'கவனிப்பு' மற்றும் 'குணப்படுத்துதல்' இரண்டையும் தான் உலகம் நாடுகிறது.
வைரஸ் ஒரு கண்ணுக்கு தெரியாத எதிரியாக இருக்கலாம். ஆனால் நமது மருத்துவ பணியாளர்கள் கொரோனாவை வெற்றிக்கொள்ளும் வல்லமை படைத்தவர்கள். அவர்கள், வீரர்களுக்கான உடையணியாத போர்வீரர்கள். கொரோனாவை எதிர்க்கும் இந்த போரில், நமது மருத்துவ பணியாளர்கள் வெற்றி பெறுவது உறுதி. உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டம், இந்தியாவுக்கு சொந்தமானதாகும். கடந்த 2 ஆண்டுக்குள் 1 கோடி மக்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். பெண்கள் மற்றும் கிராமங்களில் தங்கியிருப்பவர்கள் இந்த திட்டத்தின் முக்கிய பயனாளிகளாக உள்ளனர்.Addressing the 25th anniversary programme of RGUHS. https://t.co/tCchT1oEgA— Narendra Modi (@narendramodi) June 1, 2020
மேலும் 22 எய்ம்ஸ் அமைப்பதில் நாடு விரைவான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. இதனால் கடந்த ஐந்து ஆண்டுகளில், எம்.பி.பி.எஸ்.,சில் 30,000 இடங்களையும், முதுகலை பட்டப்படிப்பில் 15,000 இடங்களையும் சேர்க்க முடிந்தது. மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு எதிரான வன்முறையை எந்த வகையிலும் ஏற்க முடியாது. 2025க்குள் காசநோயை முழுமையாக ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடக்கின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

AthibAn Tv