
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், ஆழ்ந்த அரசியல் அறிவின்றி செய்வதாகவும், பாகிஸ்தான், சீனா விரும்பும் கருத்துகளை அவர் தெரிவித்து வருவதாக கூறியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 1962 ம் ஆண்டு போர் முதல் தற்போதுவரை நடந்த விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது : இந்தியாவிற்கு எதிரான பிரசாரங்களை முறியடிக்க நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால், எல்லையில் சீனா, பாகிஸ்தானுடன் பிரச்னை உள்ள நலையில், ஒரு கட்சியின் முன்னாள் தலைவர் ஆழ்ந்த அரசியல் அறிவின்றி பேசிவது வேதனை அளிக்கிறது. அவரது ஹேஷ்டேக்கை பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகியவை விரும்புவதும், பரப்புவதும் குறித்து அவரும், காங்கிரசும் சுய ஆய்வு செய்ய வேண்டும். அவரது ஹேஷ்டேக்கை ஊக்கமளிப்பது காங்கிரசும் அக்கட்சி தலைவர்களும் கவலைப்பட வேண்டும். எல்லையில் பதற்றமான சூழ்நிலை இருக்கும் போது, சீன ராணுவ வீரர்கள் ஆக்கிரமிப்பு குறித்து பதில் அளிப்பது உகந்தது அல்ல. இதற்கு விரைவில் பதில் அளிக்கிறேன் எனக்கூறினார்.
எல்லை விவகாரத்தில், ராகுல் விமர்சனம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமித்ஷா, பார்லிமென்ட் தொடரில், விவாதம் நடத்த வேண்டும் என காங்கிரஸ் விரும்பினால், நாங்கள் தயாராக உள்ளோம். 1962 போர் முதல் தற்போது நடந்தது வரை விவாதிக்க தயாராக உள்ளோம். விவாதத்திற்கு நாங்கள் பயப்படவில்லை. ஆனால், நமது வீரர்கள் எல்லையில் பதற்றமான சூழலில் இருக்கும் போது, மத்திய அரசும் தீர்க்கமான நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், ராகுல் பேசுவது சீனா, பாகிஸ்தானுக்கு தான் சாதகமாக அமையும்.
ஜனநாயகத்தை பற்றி.,
ஜனநாயகம் என்பதற்கு ஒழுக்கம், சுதந்திரம் தான் அதற்கு முழுமையான மதிப்பை வழங்கும். பா.ஜ.,வில் தலைவராக அத்வானி,ராஜ்நாத், நிதின்கட்காரி என பலர் வந்துள்ளனர். நான் தலைவராக இருந்தேன். தற்போது நட்டா உள்ளார். நாங்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களா? இந்திராவிற்கு பின்னர், சோனியா குடும்பத்தில் இருந்து யாரேனும் வெளிநபர்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களாக உள்ளார்களா? அப்படி இருக்கும் போது, ஜனநாயகத்தை பற்றி காங்கிரசார் பேசுகிறார்கள்?
கொரோனாவை வைத்து நான் அரசியலில் ஈடுபடவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் எனது டுவீட்டை நீங்கள் பார்க்கலாம். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25 அன்று அறிக்கை வெளியிடுவேன். ஜனநாயகத்தின் வேர்களை தாக்கியதால், அவசர நிலையை மக்கள் என்றும் நினைவில் வைத்திருக்க வேண்டும். அதனை மறக்கக்கூடாது. அரசியல் கட்சி தொண்டர், குடிமக்கள் என யாரும் மறக்கக்கூடாது. அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இது ஒரு கட்சி சார்ந்தது அல்ல. நாட்டின் ஜனநாயகத்தின் மீது நடந்த தாக்குதல். இவ்வாறு அமித்ஷா கூறினார்.


AthibAn Tv