Type Here to Get Search Results !

உலக தாதா தாவூத் இப்ராஹிம் கொரோனாவால் உயிரிழந்ததாக செய்தி மறுத்த தாவூத்தின் தம்பி

தாவூத், D-கம்பெனிக்கு பாக் ...

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கொரோனாவால் உயிரிழந்ததாக செய்தியாக பரவிய நிலையில், அவர் நலமுடன் இருப்பதாக அவரது சகோதரர் அனீஸ் இப்ராஹிம் உறுதி செய்துள்ளார்.

1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு மற்றும் பல்வேறு பயங்கரவாதம் சதித் திட்டங்களில் நீண்டகாலமாக தேடப்படும் குற்றவாளியாக இருப்பவர் தாவூத் இப்ராஹிம். பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யின் அடைக்கலத்தில் தாவூத் இருப்பதாக கூறப்படுகிறது. 60 வயதிற்கு மேலாகும் இவருக்கு சமீபகாலமாக உடல்நிலை சரியில்லை என்ற செய்தி வந்தது.

இந்த நிலையில் தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது மனைவி கொரோனாவால் பாதிக்கப்பட்டு கராச்சி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், சிகிச்சை பலனின்றி தாவூத் இறந்துவிட்டதாகவும் செய்திகள் பரவின. இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் சகோதரர் அனீஸ் இப்ராஹிம் அளித்த பேட்டியில், “அண்ணன் நலமுடன் உள்ளார். ஷகீலும் (தாவூத்தின் கூட்டாளி) நன்றாக உள்ளார். யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை. குடும்பத்திலிருந்து யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை.” என கூறியுள்ளார். இருப்பிடம் குறித்த தகவலை தெரிவிக்க மறுத்துவிட்டார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.