Type Here to Get Search Results !

சப்பாத்திக்கள்ளி பழம் போல் இருக்கும் இந்த பழத்தின் சிறப்பு தெரியமா

இதயத்தின் ரத்த ஓட்டத்தை ...

ஒரு காலத்தில் இப்பழத்தை யாரும் அறிந்து கொண்டது இல்லை. இப்பழத்தின் பெயர் டிராகன் பழம் ஆகும். இந்த பழமானது பார்ப்பதற்கு சப்பாத்திக்கள்ளி பழம் போல் இருக்கும் , அதாவது சிவப்பு நிறத்தில், சராசரியாக 700 முதல் 800 கிராம் எடை கொண்டவை, இப்பழத்தின் உள் பகுதிகளில் சிறு விதைகளுடன் இனிப்புக் கூழ் போன்ற சுவையுடன் இருக்கும். இவை தற்போது பழக்கடைகளில் அதிகமாக விற்பனை செய்து வருகின்றன.

இப்பழம் பெரும்பாலும் தோற்றமானது தென் அமெரிக்க ஆகும். இவை அதிக வெப்ப மண்டல பகுதிகளில் பயிரிடப்படுகிறது. இதற்கு மற்றோரு பெயர் ஆன பிட்டாயா ஆகும், தற்போது இவை அனைத்து நாடுகளிலும் கிடைக்கின்றன. அதுமட்டும் இல்லாமல் இவை அறிதாக கிடைக்க கூடிய பழங்களில் ஒன்றாக உள்ளது.

இப்பழத்தில் பல நன்மைகள் உள்ளன, இப்பழத்தில் விட்டமின் சி அதிகமாக இருப்பதால் அதிக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், புற்று நோயை குணப்படுத்தவும் உதவுகிறது, மற்றும் உடலின் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியை தருகிறது, இவை அதிக உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

இப்பழத்தின் உட் பகுதியில் இருக்கும் சிறு கருப்பு விதைகள் செரிமானத்திற்கு நல்லது, மற்றும் நார்ச்சத்து அதிகமாக காணப்படுவதால் குடல் பிரச்சனை மற்றும் மலச்சிக்கல், குடல் புற்று நோய் போன்றவை வருவதை தடுக்க உதவுகிறது. மற்றும் மனிதன் நீண்ட காலம் நோய் நொடிகள் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கு இந்த டிராகன் பழம் அதிக நன்மைகளை வழங்கி வருகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.